“ஒருவனை மனிதனாக ஆக்குபவை உதவிகளும் வசதிகளும் அல்ல.
அவனுக்கு ஏற்படும் இடையூறுகளும் துன்பங்களுமே ஆகும்.”
*****
“பிறர் நாவை அடக்க முடியாது.
ஆனால் அவர்களின் பேச்சுக்களை அலட்சியம் செய்ய முடியும்.”
*****
“வாழ்க்கை இன்பமானதும் அல்ல துன்பமானதும் அல்ல.
தைரியத்தோடும், தியாக உணர்ச்சியோடும் ஈடுபடவேண்டிய ஒரு கடினமான தொழில்.”
*****
“வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்.
வெற்றி சிரித்து மகிழ வைக்கும்.
தோல்வி சிந்தித்து வாழ வைக்கும்.”
*****
“துன்பத்தை அனுபவித்த காயத்தை மறந்துவிட வேண்டும்.
ஆனால் அவை தந்த பாடத்தை மறந்துவிடக் கூடாது.”
*****