அரிசி மா – 1 கப்
அவித்த கோதுமை மா – 1 கப்
தேவையான அளவு உப்பு
வறுத்து நெரித்து கோது நீக்கிய பயத்தம் பருப்பு – 1கப்
தேங்காய் துருவல் – 2 கப்
துருவிய வெல்லம் – 1 கப்
ஏலக்காய் பொடி – தேவையான அளவு
ஒரு பாத்திரத்தில் அளவான நீரில் பயத்தம் பருப்பை சேர்த்து வேக வைத்து இறக்கி, அதனுடன் தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து ஒரு கரண்டியால் கிளறி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மா, அவித்த கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். நன்கு கொதித்தநீரை வேறொரு பாத்திரத்தில் ஊற்றி 1 நிமிடம் ஆற வைத்து அதை மா கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி உருண்டைகளாக பிடிக்கும் பதம் வரும்வரை அகப்பை காம்பால் கிளறவும்.
மாக்கலவையை உருண்டைகளாக உருட்டி பின் ஒவ்வொன்றையும் வட்ட வடிவமாக தட்டி நடுவே பயத்தம் கலவையை வைத்து இரண்டாக மடித்து நுனியை சேர்த்து மடித்து கொழுக்கட்டை பிடிக்கவும்.
இவற்றை இட்டலிச் சட்டியில் வேக வைத்து இறக்கவும்.