உப்பு கஞ்சி
தீட்டல் பச்சை அரிசி(தவிடு நீக்கிய பச்சை அரிசி) – 1 கப்
வெந்தயம் – 1/4 தே. கரண்டி
பூண்டு – 3 பல்
தேங்காய்ப் பால் – 2 கப்
உப்பு தேவையான அளவு
தீட்டல் பச்சை அரிசி, வெந்தயம், சிறிது சிறிதாக நறுக்கிய பூண்டு இவற்றை நீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
வெந்ததும் தேங்காய்ப் பால், மீண்டும் சிறிதளவு உப்புசேர்த்து கொதிக்கவைத்து இறக்கி பரிமாறவும்.
உழுத்தங் கஞ்சி
உப்பு கஞ்சி செய்முறையில், தேங்காய் பால் சேர்க்கும் போது 1/4 கப் வறுத்த உழுத்தம் மாவும் சேர்க்க வேண்டும்.
முடக்கத்தான் கஞ்சி
உப்பு கஞ்சி செய்முறையில், தேங்காய்ப் பால் சேர்க்கும் போது இரண்டு கைப்பிடி கழுவிய முடக்கத்தான் இலைகளை சிறிதாக நறுக்கி சேர்க்கவேண்டும்.