“மெளனமாக இருந்து பார். காற்றும் மரமும், செடி கொடிகளும், மலரும் மண்ணும், மழையும் சொல்லும் இரகசியம் உன் காதுக்குள் கேட்கும்.
நீ தேடி நிற்கும் விஷயங்கள் யாவும் உன்னைத் தேடி வரும்.
மழையைப் பார்த்து ஓடி ஒளியாதே.
குழந்தை தாய் மடியில் ஆசையாய்த் தவழ்ந்து அனுபவிக்கும் சந்தோஷத்தைப் போல் மழையோடு உறவாடிப் பார்.
மழை உன்னைத் தண்டிக்காது.
உன் உச்சி முகர்ந்து உன்னை வாழ்த்திவிட்டுப் போகும்.
மௌனத்தை தாய் மொழியாகக் கொண்டு மகாத்மாவாக மாறிவிடச் சொல்லவில்லை.
மௌனம் உன்னை மனிதனாக மாற்றும்.
மனிதம் உன்னை மகாத்மாவாக மாற்றும்.
உன்னை என்று நான் சொன்னதெல்லாம் உனக்கு மட்டுமல்ல, எனக்கும் தான்.
நான் கற்றதும் பெற்றதும் இதைப் படிக்கும் உன்னோடும் பகிர்ந்து கொள்கிறேன்.”
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 37
Posted in படித்ததில்பிடித்தது. RSS 2.0 feed.