“நீ வாயைத் திறக்கும் போதெல்லாம் உன் உள்ளத்தை திறக்கிறாய்.
அதனால் கவனமாக இரு.”
*****
“வயலுக்கு கேடுகள் களைகள் . மனிதனுக்கு கேடுகள் ஆசைகள்.”
*****
“உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை எனில் உன் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்று பொருள்.”
*****
“குழந்தைகளிடமிருந்து, வளர்ந்த மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை:
கள்ளமில்லாச் சிரிப்பு
உண்மையான பேச்சு
எல்லோரிடமும் காட்டும் ஒரே வித மரியாதை
முகத்தில் சாந்தம்.”
*****
“மொத்த உலகத்திற்கும் பட்டுக் கம்பளம் விரிப்பதைவிட, நம் கால்களுக்கு காலணி அணிந்துகொள்வது சுலபம்.
அனைவரையும் புகார் செய்வதை விடுத்து நம்மை மாற்றிக்கொள்வதே சரியானது.”
*****