“வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று.
வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையைவிட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.”
*****
“சிக்கல்கள் என்பவை ஓடும் ரயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால் அவை சிறிதாகிவிடும்.
இதுதான் வாழ்க்கை.”
*****
“படிப்பு எதற்கு? அறிவைப் பெற.
அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து, மற்ற மனிதனுக்கு உதவியாய், தொல்லை கொடுக்காமல் வாழ்வதற்கு.”
*****
“நேரத்தைத் தள்ளிப்போடாதே. தாமதங்கள் அபாயகரமான முடிவைக் கொண்டுள்ளன.”
*****
“பசித்துச் சாவதைவிட பசியை மாற்றும் முயற்சியில் மடிவது மேல் அல்லவா.”
*****
“மன்னித்தல் தண்டித்தலைவிட சிறந்தது.
ஏனெனில் தண்டித்தல் மிருக குணம்.
மன்னித்தல் மனித குணம்.”
*****