“உன்னுடைய எதிரிகளை எப்போதும் மன்னித்துக்கொண்டே இரு. அதைக் காட்டிலும் வேறெதுவும் அவர்களை அவமானப்படுத்துவதில்லை.”
*****
“தெரிந்துகொள்ளாமல் இருப்பது மன்னிக்கக் கூடியது. தெரிந்துகொள்ள விரும்பாதது மன்னிக்க முடியாதது.”
*****
“நீங்கள் ஒருமுறை அல்லது இருமுறை முயன்று தோல்வி அடைந்தீர்கள் என்றால் நீங்கள் செய்யும் முயற்சி முறை அல்லது நீங்கள் செல்லும் பாதையில் தவறு இருக்கின்றது.
மீண்டும் நீங்கள் செய்த முறை அல்லது பாதையினை சற்று மாற்றி மாற்றி அமைத்து இடைவிடாது முயற்சி செய்யும்போது உங்கள் தோல்வி இருள் மறைந்து வெற்றி ஒளி படர ஆரம்பிக்கும்.
இந்த முயற்சியின் தோல்விதான் பல துறைகளில் வெற்றிபெற உதவிடும் படிக்கட்டு.”
*****
“பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை
வாழ்க்கை ஒரு பரிசு – அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு சாகச பயணம் – அதனை மேற்கொள்ளுங்கள்.
வாழ்க்கை வினோதம் – அதனைக் கண்டறியுங்கள்.
வாழ்க்கை கடமை – அதனை நிறைவேற்றுங்கள்.
வாழ்க்கை ஒரு சவால் – அதனை சந்தியுங்கள்.
வாழ்க்கை ஒரு சோகம் – அதனைக் கடந்து வாருங்கள்.
வாழ்க்கை ஒரு துயரம் – அதனை தாங்கிக்கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு காதல் – அதனை அனுபவியுங்கள்.
வாழ்க்கை ஒரு அழகு – அதனை ஆராதியுங்கள்.”
*****
“நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தைப் பார். ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை.”
*****
“பிறர் தவறுகளைக் கண்டு, தன் தவறுகளைத் திருத்திக்கொள்கிறவர் தான் அறிவாளி.”
*****
“அன்பை ஆயுதமாக ஏந்தியவனுக்கு தோல்விகள் இல்லை.”
*****