ஆராரோ ஆரிவரோ
ஆராரோ ஆரிவரோ
கண்மணியே கண்ணுறங்கு
அழாமல் நீ உறங்கு…
அப்பா அடித்தாரோ
அணைத்து தூக்கும் கையாலே
கண்ணே அவர் உனக்கு
நல்ல வழி காட்டிடுவார்…
மாமா அடித்தாரோ
பரிசம் போடும் கையாலே
கண்மணியே அவர் உனக்கு
கல்வி கற்க வழி சமைப்பார்…
மாமி அடித்தாரோ
அன்பாய் அணைக்கும் கையாலே
முத்தே அவர் உனக்கு
பண்பாடு கற்றுத்தருவார்…
பாட்டி அடித்தாரோ
பாசமாய் ஊட்டிடும் கையாலே
செல்லமே அவர் உனக்கு
கதைகள் பல சொல்லிடுவார்…
பாட்டன் அடித்தாரோ
பாங்காய் தழுவிடும் கையாலே
தேனே அவர் உனக்கு
அறிவுரைகள் சொல்லிடுவார்…
ஆராரோ ஆரிவரோ
ஆராரோ ஆரிவரோ
கண்மணியே கண்ணுறங்கு
அழாமல் நீ உறங்கு…