“பெற்றோர்களுக்காக ஏதாவதொன்றை விட்டுச் செல்லுங்கள்.
பெற்றோர்களை ஏதாவதொன்றிற்காக விட்டுச் செல்லாதீர்கள்.”
*****
“அன்பு என்பது வார்த்தைகளில் இருக்கக் கூடாது, மாறாக இதயத்தில் இருக்கவேண்டும்.
கோபம் என்பது இதயத்தில் இருக்கக் கூடாது, வார்த்தைகளில் மட்டும் தான் இருக்கவேண்டும்.”
*****
“அழகான முகத்தை தேடாதே. அது உன் வாழ்வில் ஏமாற்றத்தை உண்டாக்கும்.
அன்பான இதயத்தை தேடு. அது உன் வாழ்வில் ஏற்றத்தை உண்டாக்கும்.”
*****
“தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய்.
ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனைகூட செய்யாதே.”
*****
“உன்னால் பிறர் கண்ணீர் விட்டால் அது பாவம்.
உனக்காக பிறர் கண்ணீர் விட்டால் அது பாசம்.”
*****