புது உலகம்
உருவானது
என்னுள்…
அங்கு
தென்றல்
தவழ்ந்து திரிந்தது…
வண்ண வண்ண மலர்கள்
பூத்துக் குலுங்கின…
வண்டினங்கள்
மலர்களோடு உறவாடின…
புள்ளினங்கள்
கானமிசைத்தன…
மீன்கள்
நீரோடையில் துள்ளி விளையாடின…
குயில்களும் மயில்களும்
பாடி ஆடின…
மானுடர் இல்லா அவ்வுலகில்
அவனும் நானும் தனியே…!!!
அதுதான்
காதல் தேசமோ!!!