அந்தி சாயும் நேரம்
ஆதவன் ஓடி மறைந்திட
பகலும் பின்னே சென்றிட
அம்புலி தேடி வந்திட
இரவும் மெதுவே தொடர்ந்திட
மண்ணில் விழுந்த பூக்கள்
விண்ணில் சென்று பூத்திட
உயிரினம் களைத்து ஓய்ந்திட
உலகமே உறக்கத்தில் ஆழ்ந்திட
மீளப்பெற முடியாத
நாளொன்று
மெது மெதுவே
தேய்ந்து மறைகிறது…