“உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே, ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன.”
*****
“ஆண்டவன் எல்லோருக்கும் எதோ ஒரு திறமையைக் கொடுத்திருக்கிறான், நாம் அதைக் கண்டுகொள்ளாமல், திறமையற்றவர்களாகத் திரிகிறோம்.”
*****
“நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு, இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்.”
*****
“நீ எப்போது யாருமற்ற ஏழை, எளியவர்களுக்கு உதவுகிறாயோ, அப்போது ஆண்டவன் உன்னிடம் ‘கடன்காரன்’ ஆகிறான்.”
*****
“கோபம் என்னும் அமிலம், எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலசத்தையே பெரிதும் நாசப்படுத்தி விடும்.”
*****
“இன்பத்திலும் துன்பத்திலும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு உண்மை,
‘இந்த நிமிடம்கூட நிரந்தரமில்லை’.”
*****