தீயவற்றை விலக்கி
பார்ப்பவையும் கேட்பவையும்
நல்லவையாக இருந்துவிட்டால்
உள்ளத்தில் விளையும்
நல்லெண்ணங்கள்…
அதனால்…
அன்போடு
பாசமும் நேசமும்
ஊற்றெடுக்கும்…
சொல்லிலும் செயலிலும்
தூய்மையும் நோ்மையும்
சேர்ந்திடும்…
நெஞ்சில் துணிவும்
உறக்கத்தில் அமைதியும்
வந்திடும்…
கடவுளின் அருள்
கிடைத்திடும்…
இனிமையான வாழ்வு
அமைந்திடும்…