சிறிது சிறிதாய் ஈர்த்து
என்னுள் நிறைந்துவிட்டாய்
பெண்ணே!
மாற்றங்கள் செய்துவிட்டாய்…!!!
தனிமையை நாடுகின்றேன்
அங்கு
உன் மடியில் சாய்கின்றேன்…
அழகையெல்லாம் ரசிக்கின்றேன்
அதிலே
உன்னையே காண்கின்றேன்…
இசையில் தொலைகின்றேன்
கற்பனையில்
உன்னோடு இசைக்கின்றேன்…
காதலில் வீழ்ந்துவிட்டேன்
கனவுலகில்
உன்னையும் இழுத்துக்கொண்டேன்!!!