“செயல்படும்போது அதற்குத் தேவையான சக்தி கிடைக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த நினைவில் உங்களுடைய சிந்தனையையும் செயலினையும் ஒருமுகப்படுத்துங்கள். வெற்றி நிச்சயம் உண்டு.”
*****
“நட்பாக இருந்தாலும் சரி, நல்ல உறவாக இருந்தாலும் சரி,
அளவோடு பழகினால் ஆயுள்வரை.
அளவிற்கு மீறிப் பழகினால் பாதிவரை.”
*****
“அதிகாரம் அன்புமயமானால்,
நாடு அமைதிமயமாகும்.
வாழ்வே இன்பமயமாகும்.”
*****
“மனிதனின் வாழ்க்கைச் சக்கரத்தில் கொடுமையான துன்பம் தருகிற கதை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு மனிதனும் ‘துணிவு’ என்ற எண்ணெயை தன்னுடைய சக்கரத்திற்கும், மற்றவர்களின் வாழ்க்கைச் சக்கரங்களுக்கும் போட வேண்டும்.
அப்போது தான் எல்லாச் சக்கரங்களும் இணைந்து முன்னேறும்.”
*****
“தேவையான நேரத்தில் காட்டப்படாத அன்பு பின்பு ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வந்தாலும் அர்த்தம் அற்றது.”
*****