கண்ணிமைத்த பொழுதிலே
மறைந்துவிட்டாள் வெண்ணிலா…
பிடித்துவிடுவேன் என
பயந்துவிட்டாளோ…
அவளை
மறைத்துவிட்டன
மேகங்கள்…
கடத்திவிடுவேன் என
பயந்தனவோ…
விண்ணிலே
ஏகாந்தமாய் பவனி வரும்
வெண்ணிலாவே!
உனது காவலர்களோ
மேகங்கள்!!!
மண்ணிலே ஒருமுறை
வந்திறங்கி பார்த்திடு…
அழகிலே
உன்னைவிட சிறந்த
பெண்ணிலாக்கள்
பயந்து பயந்து உலா வருவதை…
உனது காவலர்கள் சிலரை
துணைக்கனுப்புவாயா…!!!
மண்ணிலே பெண்ணிலாக்கள்
ஏகாந்தமாய் உலா வர!!!