தாவித் திரியும் மனதை கட்டி
ஒரு நிலையில் நிறுத்த
யோகா தேவையில்லை
உனது நினைவுகளே போதும்…
அலைந்து திரியும் கால்களை கட்டி
ஒரு இடத்தில் நிறுத்த
பயிற்சி தேவையில்லை
உனது தரிசனமே போதும்…!!!
முரட்டுக் குணங்களை அழித்து
அங்கு மென்மையை விதைத்திட
கட்டுப்பாடுகள் தேவையில்லை
உனது காதலே போதும் கண்ணே!!!