வெங்காயம் – 250 கிராம்
பூடு – 3 பல்
வெந்தயம் – 2 மேசைக்கரண்டி
தேங்காய்ப் பால் -1/2 கப்
மிளகாய்+மல்லித் தூள் – தேவையான அளவு
புளிக் கரைசல், உப்பு, கறிவேப்பிலை – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
சமையல் தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பு வெந்தயத்தை அதற்களவான நீரில் ஊற விடவும்.
சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கிய வெங்காயத்தையும் பூண்டையும் எண்ணெயில் வதக்கவும். பொன்னிறமாக வருவதற்கு முன்பு ஊறவிட்ட வெந்தயத்தை வடித்து இத்துடன் சேர்த்து இரு முறை விட்டு விட்டு கிளறியதும் பெருஞ்சிரகத்தையும் சேர்த்து இரு முறை விட்டு விட்டு கிளறவும். பின்பு கறிவேப்பிலையை சேர்த்து இரு முறை கிளறியதும் மிகுதி பொருட்களை சேர்த்து நன்றாக கலந்து வேக விடவும்.
உங்களுக்கு தேவையான பதத்தில் (நீர்த் தன்மையாகவோ அல்லது களித்தன்மையாக வறட்டியோ) இறக்கி உணவுடன் பரிமாறலாம்.