அழகும் பணமும்
இருக்கும் இடத்தில்
ஒழுக்கமும் பண்பும்
இல்லாவிடின்
மலராது
காதல்…!!!
அங்கு பிறப்பது
மோகம் மட்டுமே!!!
மோகத்தின் வாழ்நாள்
நிலையில்லா பணமுள்ளவரை…
காதலின் வாழ்நாள்
உயிருள்ளவரை…
மோகத்துள் வீழ்ந்து
சீரழிந்து போகாது
அன்பைக் கொடுத்து
பண்புடன் பழகி
காதலில் திழைப்போம்
வாழும் காலம்வரை…