உனது ஒவ்வொரு பார்வையும்
நட்சத்திரங்களாக பதிந்து
என் உள்ளத்தில்
ஔி வீசிக்கொண்டிருக்கின்றன…
உனது புன்னகை
தென்றலோடு தவழ்ந்து வந்து
என்னுள்ளே
பூக்களாக சொரிகின்றன…
இரவும் பகலும் வருவது தெரியாது
பசியும் தாகமும் அழிவது புரியாது
வலம் வருகின்றன
உணர்வுகள்
உன்னைச் சுற்றியே…!!!
சுகமான மயக்கம் தருகின்றன
உனது நினைவுகளே…!!!
இதுதான்
காதலா!!!