“சண்டைக்கு இருவர் தேவை.
நீங்கள் அவ்விருவரில் ஒருவராக இருக்காதீர்கள்.”
*****
“அழகு என்பது சில காலமே நிற்கும் கொடுங்கோலாட்சி.
அதற்கு நீ அடிமையாகாதே.”
*****
“கண்பார்வை அற்றவன் குருடன் அல்ல.
தன் குற்றங்களை உணராதவனே குருடன்.”
*****
“அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்வரை உங்களுக்கு என்றைக்கும் விடிவுகாலம் தான்”
*****
“ஒருவரைப்பற்றி மற்றவரோடு பேசிக்கொள்ளாதீர்கள்.
அவரைப்பற்றி அவரிடமே மனம்விட்டுப் பேசுங்கள்.
உங்களது பல பிரச்சனைகள் மறைந்துவடும்.”
*****
“பலரின் மாற்றங்களுக்குக் காரணம், சிலர் தரும் ஏமாற்றங்கள்தான்.”
*****
“ஒரு புத்திசாலியால் சாதிக்க முடியாததை சில நேரங்களில் ஒரு பொறுமைசாலி சாதித்துவிடுகிறான்.”
*****
“கடலளவு கண்ணீரை வடித்தாலும், நம் மனம் விரும்பாமல் எந்தக் கவலைகளையும் சரி செய்யமுடியாது.”
*****