பல நூறு மலர்கள் தரும் புத்துணர்வை
உன் வதனம் தருகிறது கண்ணா!
சிலிர்க்கச் செய்யும் பார்வை
சிவக்கச் செய்யும் புன்னகை
மயக்கம் தரும் தோற்றம்
மறக்க வைக்கும் கதைகள்
நித்தம் புது வாசமே
சித்தம் உன் வசமே…!!!
கனவிலும் நினைவிலும்
நிஜத்திலே அருகிலும்
உன்னுடனே உல்லாசமாய்
பறக்கிறது வாழ்க்கை
இனிக்கிறது பயணம்!!!