“நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.”
*****
“இறக்கத்தான் பிறந்தோம். அதுவரை இரக்கத்தோடு இருப்போம்.”
*****
“நாணயமாக நடப்பவர்கள் ஒளிக்கும் இருளுக்கும் அஞ்சுவதில்லை.”
*****
“தெரிந்தவர்களுக்கு உதவி செய்யும்பொழுது நல்ல மனிதன் ஆகிறாய்.
தெரியாதவர்களுக்கு உதவி செய்யும்பொழுது கடவுள் ஆகிறாய்.”
*****
“இளமையில் கல்வியைப் புறக்கணித்தவன் இறந்த காலத்தை இழந்தவன்; எதிர்கால வாழ்விலும் இறந்தவன்.”
*****
“உன்னை அதிகமாக நேசிப்பவர்களை நோகடிக்காதே. அவர்களின் மௌனமே உனக்குத் தண்டனையாகிவிடும்.”
*****
“உன்னை யாருக்காவது பிடிக்கவில்லை என்றாலும், உனக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றாலும், ஒதுங்கிவிடு. ஒப்புக்கு மாரடிக்காதே.”
*****