“இன்பமோ துன்பமோ
வெற்றியோ தோல்வியோ
கஷ்டமோ நஷ்டமோ
வாழ்வோ தாழ்வோ
தனக்கு நடக்கும்வரை
உலகத்தில் நடக்கும்
இவை அனைத்துமே வேடிக்கைதான்.”
*****
“வெற்றி வரும்வரை குதிரை வேகத்தில் ஓடு.
வெற்றி வந்தபிறகு குதிரையைவிட வேகமாக ஓடு.
அப்பொழுதுதான் உன் வெற்றி உன்னிடம் நிலைத்து நிற்கும்.”
*****
“தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை.”
*****
“கழிந்ததை எண்ணிக் கலங்காதே.
சென்றதைக் குறித்து சிந்திக்காதே.”
*****
“பொய் சொல்லும் மனிதரை நீ ஒருபோதும் நம்பாதே.
உன்னை நம்பும் மனிதருக்கு நீ ஒருபோதும் பொய் சொல்லாதே.”
*****