அவளை பார்த்தது
ஒரு நிமிடம் தான்…
என்னை கடக்கும்போது
என்னுள் புகுந்து
தன்னை பதித்துச் சென்றுவிட்டாள்…
புது உணர்வை விதைத்து மறைந்துவிட்டாள்…
ஒரு பகலும் ஒரு இரவும்
ஓடியது தெரியுமுன்
விருட்ஷமாகி
கிளைகள் பரப்பி
பூத்துக் குலுங்குகின்றது இதயம்…
என்னை இழுத்து வந்து
காக்க வைக்கின்றது
மறு சந்திப்புக்காக
இன்று…
இதுதான் காதலா!!!