பூச்சூடி
பொன் நகை சூடி
பட்டுடுத்தி
திலகமிட்டு
தேவதைபோல் வந்தவள்
என்னை பார்த்ததும்
புன்னகை சூடி
கன்னத்தில் குழி பறித்து
வைத்துவிட்ட கன்னத்தில்
சுற்றம் மறந்து
சூழல் மறந்து
வீழ்ந்துவிட்டேன்…
வீழ்ந்து புதைந்தும்விட்டேன்…!!!
புரிந்தது…
வீழ்ந்தது
காதலெனும் புதைகுழியில்!!!