விண்ணிலிருந்து வந்தாயோ
என்
இதயத்தில் ஔி வீச…
உன்
இதழ்களில் தேன் துளிகள்
மேனியில் மென்மை
சுவாசத்தில் சுகந்தம்
பரிசாக தந்தனவோ
மலர்கள்
என்னை
மயக்கத்தில் ஆழ்த்திடவே…
விழிகளால்
மன்மத அம்புகள் எய்திட
கூடவே திருடவும்
கற்றுத் தந்தானோ
மாறன்…
என்னை திருடிச் செல்லும்
பெண்ணே!
என் உள்ளத்தில் பதிந்துவிட்ட
தாரகையே!
உயிரூட்ட வந்துவிடு
என் உயிரோடு கலந்துவிடு…