நீ என் அருகில் வந்தாயா
நான் உன் அருகில் வந்தேனா…
இல்லை
அந்த மன்மதன்
உன்னை என் அருகில் வைத்தானா…
புரியவில்லை ஒன்றும்!!!
உன்னை பார்த்ததும்
இலகுவாய் மறந்துவிட்டது யாவும்…
அழுத்தமாய் பதிந்துவிட்டாய் நீ…
அற்புதமாய் ஔி வீசி
பற்றிப் பரவிவிட்டது காதல்…!!!
கடினம் அழித்து
மென்மையை பூசிக்கொண்டது
என் உள்ளம் மட்டுமல்ல
என் உடலும் தான்…
அழகானது
என் உள்ளம் மட்டுமல்ல
என் உலகமும் தான்!!!