மாசற்ற உள்ளம்
உன் பார்வையில் தெரிகிறது…
அதில் ஊற்றெடுத்து பெருகும் அன்பு
உன் புன்னகையில் வழிகிறது…
உன் உள்ளத்தில் குடியிருந்து
அன்பிலே மூழ்கி
காதலில் மிதந்திட
ஆசை கொண்டேன் பெண்ணே!
உள்ளம்
உன்னை நாடுகிறது…
உன் தோற்றத்தில் தெரியும் கண்ணியம்
தடுக்கிறது…
சம்மதம் பெற
அணுகும் முறை தெரியாமல்
தவிக்கின்றேன் கண்ணே!
என்னை நோக்கிய
உனது முதலடிக்காக
தவம் இருக்கின்றேன் அன்பே!