நீல நிற ஆடையில்
வெண்ணிலவாய் பவனி வந்து
என் விழிகளை நிறைத்தாய்…
பச்சை நிற ஆடையில்
றோஜாவாய் பூத்திருந்து
என்னை மயக்கிவிட்டாய்…
இன்று
வெண்ணிற ஆடையில்
தேவதையாய் தவழ்ந்து வந்து
என்னுள் புகுந்துவிட்டாய்!!!
பெண்ணே!
தவமிருக்கின்றேன்
மன்மத அம்புகள் யாசித்து…
காதல் கணைகள் தொடுப்பதை
என் கடமைகளில் ஒன்றாக்கிவிட்டாயே!!!