விடாமுயற்சியை விலையாக கொடுத்து
அவளது பார்வையை வாங்கினேன்…
கண்ணியத்தை விலையாக கொடுத்து
அவளது புன்னகையை வாங்கினேன்…
கருணையை விலையாகக் கொடுத்து
அவளது நட்பை வாங்கினேன்…
அன்பை விலையாகக் கொடுத்து
அவளது காதலை வாங்கினேன்…
எனது இதயத்தை விலையாகக் கொடுத்து
அவளது உயிரையே வாங்கிவிட்டேன்!!!