மழை தரும் மரங்கள்…
அதை அழித்து
பட்டினியை வாங்காதீர்…
விழிகளுக்கு குளிர்மையையும்
உள்ளத்திற்கு அமைதியையும்
உடலுக்கு நிழலையும்
தரும் மரங்கள்…
அதை அழித்து
வாழ்வை பாலைவனமாக்காதீர்…
இயற்கையின் நண்பர்கள் மரங்கள்…
அதை அழித்து
இயற்கையின் கோபத்திற்கு ஆளாகாதீர்…
உயிர் தரும் மரங்கள்…
அதன் உயிர் பறித்து
தற்கொலை செய்யாதீர்…