என்னை பார்த்ததும்
மலர்ந்த பூவே!
காந்தமாய் இழுத்து
தடுத்துவிட்டாய்…
நான் பார்த்ததும்
சிவந்த செம்பூவே!
தென்றலாய் சுற்றி
வரித்துவிட்டாய்…
இன்று
முதல் நாள்
விடுதலை செய்திடு என்னை…
மீண்டும் மீண்டும்
சந்திப்போம்
நடப்பதை பார்த்து
சிந்திப்போம்
இருவரும் இணைந்து
முடிவு செய்வோம்…