சின்னக் கண்ணா!
அன்று
வெண்ணெய் ததும்பும்
இதழ்களால் நீ
கன்னங்களில் வரையும்
குறும்புக் கதைகளுக்காய்
ஏங்கியிருந்தனர்
கோகுலத்து அன்னையர்…
சிங்காரக் கண்ணா!
இன்றோ
புல்லாங்குழலை
முத்தமிட்டு தழுவி
கானமிசைக்கும்
உன் இதழ்கள் பார்த்து
அந்த புல்லாங்குழலாய்
மாறமாட்டோமாவென
ஏங்கித் தவிக்கின்றனர்
கோபியர்!!!