கண்களால் கவர்ந்து
அவளை
உள்ளத்தில் சிறை வைத்தேன்…
கடமைகள் பொறுப்புகள்
அவளை
விடுதலை செய்யாவண்ணம்
மின்சார வேலியிட்டேன்…
ஆனால் அவளோ
விடுதலை தந்துவிட்டாள்
விரைவில் எனக்கு
என் பொறுப்புகளிலிருந்து…!!!
ஊக்கம் தந்தாள்
உற்சாகம் தந்தாள்
சக்தி தந்தாள்
வேகம் தந்தாள்
என்னுள் இருந்தே…!!!
இதோ புறப்பட்டுவிட்டேன்
நம்பிக்கையுடன்
அவளிடம் காதல் சொல்ல!!!