இறைவன் தந்த வரமாய்
என் கருவில் உதித்த
செல்லமே!
பூங்கரங்களால்
அழைத்து என்னை
பட்டுக் பாதங்களால்
நெஞ்சில் முட்டித் தள்ளி
பொக்கைவாய் சிரிப்பில் என்னை
மயக்கிடும் கண்மணியே!
கருவிழிகள் உருட்டி
கதை பேசும் கண்ணே!
உன் இதழ் விரித்து
அம்மா என்றழைக்கும் குரல் கேட்க
தவமாய் தவம் இருக்கின்றேன்
கண்ணம்மா…