“நாம் தேர்ந்தெடுக்கும் பாதைதான் நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றது.
தேர்ந்தெடுக்கும் முன் யோசியுங்கள், தேர்ந்தெடுத்தபின் தயங்காதீர்கள்.”
*****
“வாழ்க்கை என்பது நமக்கு நாமே எழுதும் கடிதம். ஒவ்வொரு பக்கத்தையும் ரசித்து எழுதுவோம், நம் கதை சுவாரஸ்யமாக அமைய.”
*****
“ஏழையாகப் பிறந்து ஏழையாகக் கூட இறந்துவிடு.
தவறில்லை.
ஆனால் அதையே காரணம் காட்டி ஒரு போதும் கோழையாக இறந்துவிடாதே.”
*****
“பேரூந்தில் வயதானவர்கள் உட்கார இளைஞர்கள் எழுந்து நின்றுகொண்டு இடம் தரவேண்டும்.
ஆனால், வேலை வாய்ப்பில் மட்டும் பெரியவர்கள் உட்கார்ந்தே இருக்க விரும்புகிறார்கள், இளைஞர்களுக்கு இடம் தராமல்.”
*****
“தோல்வி ஏற்படுவது அடுத்த செயலை கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.”
*****
“பிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல. அவர்களை அதிகமாக நினைப்பதற்கே.”
*****
“எழுந்து நடந்தால் இமய மலையும் நமக்கு வழி கொடுக்கும்.
உறங்கிக் கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறை பிடிக்கும்.”
*****