“பொறுமையால் நீ ஆயிரம் முறை கூட தோற்றிருக்கலாம்.
ஆனால் அவசரத்தால் நீ ஒருமுறை கூட வெற்றி பெற முடியாது.”
*****
“நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதுமே மண்டியிடுவது இல்லை.”
*****
“மானமுள்ள மனிதா!
உன் பெற்றோர்களுக்காக
உன் மனைவிக்காக
உன் பிள்ளைகளுக்காக
உன் நட்புக்காக
உன் இனத்துக்காக
உன் தேசத்துக்காக
உன் மொழிக்காக
உன்னை விட்டுக்கொடு.
ஆனால்
மற்றவனுக்காக
இவைகளை
விட்டுக்கொடுக்காதே.”
*****
“உன் வாழ்வின் தூரம் உன் உயிர் உள்ளவரை.
உன் வாழ்வின் ஆழம் உன் உண்மை உள்ளவரை.”
*****
“கண்களை இழந்தவன் குருடனல்ல.
எவன் தன்னிடமுள்ள குறைகளை மறைக்கிறானோ அவனே குருடன்.”
*****