கருவில் நிறைந்து
உள்ளம் நிறைத்தாய்…
இன்று
மடியில் நிறைந்து
விழிகள் நிறைக்கின்றாய்…
இல்லத்தில் பூத்த
முதல் பூ நீ…
வாழ்வில் ஔிவீச வந்த
தாரகை நீ…
கவலைகளை துரத்தி அழித்த
தென்றல் நீ…
இன்பத்தை அள்ளித் தந்த
பொக்கிஷம் நீ…
எங்கள் உயிரோடு கலந்த
உயிர் நீ
கண்ணம்மா…!!!