மாயங்களால் மயக்கி என்னை
மந்திரத்தால் கட்டி வைத்து
மனம் முழுதும் நிறைந்து நீயே
மன்னனும் ஆகிவிட்டாய்…
மனதிலே பூத்த மலர்கள்
காதல் கணைகளாய் மாறியதே
மின்னலாய் பாய்ந்து உன்
மார்பினிலே தைக்கிறதே…
அள்ளிக்கொள்வாயா
இதயத்தில் வைப்பாயா
கணைகளை மட்டுமல்ல
இந்த மங்கையையுமே…
காதல் கண்ணா!
மாயக் கண்ணா!
என் உள்ளத்தை பற்றியிருக்கும்
மின்சாரக் கண்ணா!!!