“மனதிற்கான எதிர்பார்ப்பை இறகு போல் வை,
இந்த உலகிடம் எதையும் எதிர்பார்க்காமல்…
காலம் என்னும் காற்று நம்மை அடித்துக்கொண்டு போய் எங்கோ சேர்த்திருக்கும் சிறு வலிகள் இல்லாமல்.”
*****
“நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்கத் துவங்குமுன் விலகி நிற்க கற்றுக்கொள்வது நலம்.”
*****
“நீ வளரும் வேகத்தில், உன் பெற்றோர்கள் வயதாவதை மறந்துவிடாதே.
உன் பெற்றோரை நேசி.”
*****
“கண்ட பெண்களை மஞ்சத்தில் வீழ்த்துவது அல்ல ஆண்மை.
கொண்ட பெண்ணின் நெஞ்சத்தில் வீற்றிருப்பதுதான் உண்மையான ஆண்மை.”
*****
“நீங்கள் ஒரு வாய்ப்பை தவறவிட்டால் உங்கள் விழிகளை கண்ணீரால் நிரப்பாதீர்கள். அது உங்கள் முன்னால் உள்ள இன்னொரு வாய்ப்பையும் மறைத்துவிடும்.”
*****