
“மனிதனை நிரந்தர வயதானவன் ஆக்குவது கவலையன்றி வேறில்லை.”
*****
“முதுமையை அடைந்தபிறகே, சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளாததைப் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறோம்.”
*****
“வயது என்பது வருடங்களைப் பொறுத்தது அல்ல. மன உணர்வையும் உடல் நலத்தையும் பொறுத்தது. சிலர் பிறக்கும்போதே வயதானவர்களாக பிறக்கிறார்கள். சிலருக்கு வயதாவதே இல்லை.”
*****
“அவசியம் இல்லாதவர்களிடம்
உண்மைகளை சொல்லாதீர்கள்.
அவசியமானவர்களிடம்
பொய்களை சொல்லாதீர்கள்.
இரண்டுமே உங்களை
காயப்படுத்தும்.”
*****
“வில்லில் இருந்து எய்யப்படும் அம்பு, ஒரு படி பின்னோக்கி சென்று குறி வைத்தால் தான் மூன்று படி முன்னோக்கி வந்து தன் இலக்கை அடைய முடியும்.
வாழ்க்கையில் நாம் அடையும் பின்னடைவுகளும் அப்படித் தான். ஒரு படி சறுக்கினாலும் அது மூன்று படி முன்னேறே உதவும் என்ற நம்பிக்கை கொள்வோம்.”
*****