மழலையினால் அழைத்து
பிஞ்சுக் கைகளால் அணைத்து
செப்பிதழ்களால் முத்தம் தந்து
உன்னருகே கட்டி வைத்தாய்
என்னையே!!!
விழிகளால் சிரித்து
ஏதேதோ கதைகள் பேசி
பாதங்களால் வளைத்து
அசையமுடியாது செய்துவிட்டாய்
என்னையே!!!
நெஞ்சிலே முகம் புதைத்து
தாலாட்டு பாடக் கேட்டு
ராகம் பாடி கண்ணுறங்கி
உறங்கவைத்துவிட்டாய்
என்னையுமே!!!