
“கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது.
ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதை கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல்.
இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.”
*****
“நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்.
ஆனால் வெற்றி என்பது நம்பிக்கை உடையோரிடமே வரும்.”
*****
எந்த மனிதன் தன்னைத் தானே வெறுக்கத் தொடங்கிவிட்டானோ, அவனுக்கு அழிவினுடைய வாசல்கள் அப்போதே திறந்துவிடும்.”
*****
“அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்தே தீரும்.”
*****
“தவறு செய்யும் மனிதர்களைப் பார்த்து தவறாகப் பேசாதீர்கள், ஏனெனில் உங்கள் வாழ்க்கையும் இன்னும் முடியவில்லை.”
*****
“நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள்.
நாம் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது.”
*****
“நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க தொடங்க முன் விலகி நிற்க கற்றுக்கொள்வது சிறந்தது.”
*****
“ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்”
*****
“நீங்கள் எதிர்பார்க்கும் செயல்களைச் செய்பவர் உங்கள் நம்பிக்கைக்குரியவர் என்பதல்ல.
உங்களுக்காக காயப்படவும் தயாராக இருப்பவர்தான் உங்கள் நம்பிக்கைக்குரியவர்.”
*****