தொன்மையான மொழியாம்
வீரமான
மொழியாம்
அன்பைப்
பொழியும் மொழியாம்
அறிவைக் கொண்ட
மொழியாம்
இனிமை கொஞ்சும்
மொழியாம்
பெருமை மிக்க
மொழியாம்
கலை பண்பாடு
கலாச்சாரம்
மூன்றிலுமே
உச்சம் தொட்டு
கட்டுக்கோப்பாய்
வாழ வைத்து
மிளிர்கின்ற
மொழியாம்
தமிழ்…
எம் அன்னை தமிழ் என
பெருமையுடன்
கூவிடுவோம்
எம் வழிகாட்டி
தமிழ் என
தலைநிமிர்ந்து
வாழ்ந்திடுவோம்…
வேறு வேறு தேசத்திலே
பிறந்தாலும்
வளர்ந்தாலும்
வேறு வேறு
மொழிகளிலே
கல்வி
கற்றாலும் கடமை புரிந்தாலும்
தாய்மொழியாம்
தமிழ் தன்னை
இரசித்து
ருசித்து மகிழ்ந்திருப்போம்…
இனம் வேறு என்றாலும்
மதம் வேறு
என்றாலும்
தமிழால்
இணைந்திருப்போம்
தமிழுக்காக
குரல் கொடுப்போம்
உயிருக்கு
நிகரான தமிழ் தன்னை
போற்றி
காத்திடுவோம்
உயர்த்தி
வளர்த்திடுவோம்…