
“உன் சோகத்தை யாரிடமும் காட்டாதே, அவர்கள் ஆறுதல் சொல்ல மாட்டார்கள், உன்னை கேலி செய்வார்கள்.
சோகத்தை மறைத்து அவர்கள் பொறாமைப்படும்படி சந்தோஷமாக வாழ்ந்து காட்டு.”
*****
“பொய் உன்னை வாழ வைத்து சாகடிக்கும்.
உண்மை உன்னை சாகடித்து வாழ வைக்கும்.”
*****
“அதிர்ஷ்டம் ஒருபோதும் முட்டாளை புத்திசாலியாக்குவதில்லை.”
*****
“மனம் எதைத் தீவிரமாக நினைக்கிறதோ அதுவாகவே மாறிவிடும். அதனால், மனதில் தூய்மையான உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே நினைக்க வேண்டும்.”
*****
“தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே செல்வதால் திருப்தி பெற முடியாது. நமக்கு அவசியமான பொருள்களை மட்டுமே வாங்கிக் கொள்வது நல்லது. எளிமை தான் நிம்மதிக்கு வழிவகுக்கும் என்பதை உணருங்கள்.”
*****
“ஓடி ஓடி சம்பாதித்தாலும் மறுபிறவிக்கு அவை துணை வருவதில்லை. அதனால் நியாயமான வழியில் பொருள் தேடி,… அதன் மூலம் தேவைகளை நிறைவேற்றி மகிழுங்கள்.”
*****
“தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள். பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை. அதுவே உங்களுக்கு வெற்றியாக அமையும்”
*****