
விண்ணும் மண்ணும் அழகானது…
சுற்றம் சூழல் பொலிவானது…
வெயிலும் மழையும் சுகமானது…
கேட்பவை எல்லாம் இனிமையானது…
தனிமையும் கனவும் சொர்க்கமானது…
காதல் என்னை ஆட்கொண்டபோது!!!
கதிரவனும் கடிகாரமும் பகையானது…
பசியும் தூக்கமும் எதிரியானது…
உற்றார் உறவினர் தொல்லையானது…
நட்பும் கூட்டமும் வெறுப்பானது…
கடமையும் வேலையும் பாரமானது…
காதல் என்னை ஆட்கொண்டபோது!!!