
கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஒருவன் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தான்.
தூக்குக்கயிறு, விஷம், துப்பாக்கி, கத்தி போன்றவற்றை முன்னே வைத்துவிட்டு எதை வைத்து உயிரைப் போக்கிக் கொள்வது என்று குழப்பத்தில் இருந்தவனைப் பார்த்து கடைசி பையன் கேட்டான்.
“அப்பா சாவதற்கே இத்தனை வழி இருக்கும்போது பிழைப்பதற்கு ஒரு வழி இருக்காதா?”
வாழ நினைப்பவனுக்கு புல்லும் ஆயுதம்!!!
*****
“உலகிலேயே மிகச் சிறிய ஆறு, கண்ணீர்.
அதைக் கடந்து கரையேறியவர்களை விட,
மூழ்கித் தொலைந்தவர்களே அதிகம்.”
*****
“தன்னிடத்தில் ஒன்றை இழுத்துக்கொள்ளும் சக்தியைப் போல அதை விலக்கும் சக்தியும் நம்மிடம் உள்ளது.”
*****
“தாயும் தந்தையும் மகிழ்ச்சி அடைந்தார்களேயானால், கடவுளும் மகிழ்ச்சி அடைவார்.”
*****
“தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத்தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.”
*****
“உனக்குப் பிடித்ததை நீ கடைப்பிடி.
அதுபோலவே மற்றவர்கள் தங்களுக்கு விருப்பமானவற்றை பின்பற்ற விடு.”
*****