
இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்படும் மிக அழகிய தீவு இலங்கை ஆகும்.
வணிகத்திற்கு புகழ் பெற்ற இலங்கைத்தீவை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கைப்பற்றி இறுதியில் ஆங்கிலேயர் கைப்பற்றி அதன் வளங்களையும் மக்களையும் அடிமைப்படுத்தினர்.
ஆங்கிலேயரின் கொடுமைகளால் மக்கள் பல போராட்டங்களை மேற்கொண்டு 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி விடுதலை பெற்றனர்.
இந்நாளை இலங்கை மக்கள் சுதந்திர தினமாகக் கொண்டாடுகின்றார்கள்.
இத்தினம் தேசியவிடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களாக ஆறுமுகநாவலர், சேர். பொன். இராமநாதன், S.W.W. கன்னங்கரா, அறிஞர் M.C. சித்திலெப்பை, S.W.R.D. பண்டாரநாயக்க போன்றோரைக் குறிப்பிடலாம்.
சுதந்திரதினத்தில் தேசியக்கொடி ஏற்றி தேசிய கீதம் பாடியபின் தலைவர்கள் உரையாற்றுவர்.
ஒவ்வொரு வருட சுதந்திரதினத்தன்றும் முப்படைகளின் அணிவகுப்பும் சாகசங்களும் நடைபெறும்.
அத்தினத்தில் இலங்கை நாட்டில் வாழும் பல்வேறு கலாச்சார மக்களின் நிகழ்வுகளான நடனம், பாடல், நாடகம் என்பன அணிவகுப்புகளில் இடம்பெறும்.
சுதந்திர இலங்கையை உருவாக்குவதற்காக பாடுபட்ட தலைவர்களுக்கும் வீரர்களுக்கும் மரியாதை செலுத்துவோம்.