
அன்றலர்ந்த மலர்போல் வந்து
உள்ளத்தை தழுவிச் சென்றாய்
இன்றோ
விண்ணுலக தேவதைபோல் வந்து
உள்ளத்தில் பதிந்துவிட்டாய்…
காதல் கவிதையின் உருவாய் தோன்றி
ஆசையை தூண்டுகின்றாய்
உறக்கத்தை உன் வசம் இழுத்து
கனவுலகில் தள்ளுகின்றாய்…
மின்னலாய் தாக்கி வீழ்த்தி
மயிலிறகாய் வருடுகின்றாய்
என்னவள் நீயே என்று
போராட்டம் நடத்துகின்றாய்!!!